ஐ,நா வில் உள்ள உறுப்பு நாடுகளால் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் மேலே குறிப்பிட்ட உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1981 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் அன்று இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வுடன்படிக்கையின் முக்கியக் கூறுகள்
பகுதி – 1
• எந்த விதமான வேறுபாடும். பாலின அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் ஒரு பெண்ணின் தனித்துவத்திற்கு இழுக்கும். அவர் தம் உரிமைகளை அனுபவிக்க மறுத்தலும். திருமணத்தின் மூலமாக ஒரு பெண்ணின் அரசியல். பொருளாதார. குடிமை அல்லது மற்ற துறைகளில் ஆணுக்குச் சமமான உரிமையை மறுத்தலும் பெண்களுக்கெதிரான பாகுபாடு என்று வரையறை செய்யப்படுகிறது, (விதி 1)
• ரிபெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டை ஒழிக்க உடனடியாக அனைத்து நாடுகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், (விதி 2)
இவற்றோடு ஒவ்வொரு நாடும் ஆண். பெண் சமத்துவத்தை
அ), தங்கள் நாட்டு அரசியலமைப்பு சட்டங்களிலோ அல்லது பிற சட்டங்களிலோ நடைமுறைப்படுத்த வேண்டும்,
ஆ) பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டை ஒழிக்க வல்ல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு. தண்டனை வழங்க வேண்டும்,
ஊ) பெண்களை பாகுபடுத்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்கள். விதிகள். பழக்கங்கள். நடைமுறைகள் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்,
• எல்லா வகையிலும் பெண்களை கடத்தப்படுவதும். பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் செயல்களை ஒழிக்க வல்ல தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், (விதி 6)
பகுதி – 2
• அரசியல் மற்றும் பொது வாழ்வில். பெண்கள் எவ்விதத்திலும் பாகுபடுத்தப்படுவதை ஒழிக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், ஆணுக்குச் சமமான உரிமை பெண்ணுக்கும் வழங்கப்படுவதை ஒவ்வொரு நாடும் உறுதி செய்ய வேண்டும், (விதி 7)
அ) ஒவ்வொரு பெண்ணிற்கும். தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமையும்.
ஆ) அரசின் கொள்ளைகளை உருவாக்குவதில் பங்கு பெறும் உரிமையும். அரசின் அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் உரிமையும் வழங்கப்படவேண்டும்,
பகுதி – 3
• வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை நீக்க. அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், அதோடு ஆண். பெண். பாலின சமத்துவத்தையும் உறுதி செய்திட வேண்டும், (பிரிவு 11(1))
அ) அனைத்து நபர்களின் வேலை செய்வதற்கான உரிமையை பிரித்துப் பார்க்க முடியாது என்பதையும்.
ஆ) வேலை வாய்ப்பிற்கான தேர்வு முறைகளில். அனைவருக்கும் சம அளவிலான ஒதுக்கீட்டையும்.
இ) தொழில் மற்றும் வேலையை தானே தேர்வு செய்வதற்கான உரிமையும். பணி உயர்வு மற்றும் பணியிலுள்ள போது கிடைக்கும் அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கான உரிமையும்.
ஈ) சம அளவு சம்பளம் பெறுவதற்கான உரிமையும். சம அளவிலான வேலைத் திறனாய்வும் செய்யப்படுவதற்கான உரிமையும்.
உ) பணியிலிருந்து ஓய்வு பெறும் போதும். உடல்நலக்குறைவு ஏற்படும் போதும். பணி செய்ய இயலாத நிலைக்கு ஆளாகும் போதும். விடுப்பு காலங்களுக்கான சமூகப் பாதுகாப்பும்.
ஊ) பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பான சூழலும். உறுதி செய்யபடவேண்டும்.
• திருமணம் மற்றும் பேறுகாலத்தை காரணம் காட்டி. பெண்கள் பாகுபாடுபடுத்தப்படுவதை அரசுகள் ஒழிக்க வேண்டும், (பிரிவு 11 (2)
அ) பேறு காலம். பேறு கால விடுப்பை காரணம் காட்டி. பெண்களுக்கு தண்டனை வழங்குவதும். பணியிலிருந்து நீக்குவதும் மற்றும் திருமணத்தை அடிப்படையாக கொண்டு பெண்கள் பாகுபடுத்தப்படுவது ஒழிக்கப்படவேண்டும்.
ஆ) வேலைக்கு பாதிப்பில்லாத சம்பளத்தோடு கூடிய பேறுகால விடுப்போ அல்லது அதற்கு இணையான சமூக பயன்பாடுகளோ. இதர படிகளோ வழங்கப்படவேண்டும்.
• இப்பிரிவில் கூறப்பட்டுள்ள விசயங்களை உள்ளடக்கிய சட்டங்கள். அவ்வப்போது மறு ஆய்வு செய்யப்பட்டு. வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கேற்ப திருத்தம் செய்யப்பட்டோ/நீக்கமோ செய்யப்படலாம், (பிரிவு 11 (3))
• கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் நிலையை கவனத்தில் கொண்டு. அவர் தம் குடும்பத்தின் நீடித்த வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாடும் திட்டங்கள் வகுக்க வேண்டும் (பிரிவு 14)
• திருமணத்தோடு தொடர்புடைய அனைத்து விசயங்களிலும். குடும்ப உறவுகளிலும் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாட்டை ஒழிக்க உறுப்பு நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். (பிரிவு 16 (1))
ஒரு குழந்தைக்கு செய்விக்கப்படும் நிச்சயத்திற்கும். திருமணத்திற்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது, இதற்குத் தேவையான சட்டங்களிலும். திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது வரையறை செய்யப்பட்டு. அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்படவேண்டும்.(பிரிவு 16 (2))
Leave a Reply