குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை.

(1989 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் ஐ.நா.சபையின் பொதுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது)

உலகம் முழுவதில் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வு. உரிமைகள். பாதுகாப்பு ஆகியவற்றைக் காத்து மேம்படுத்துவதற்காக இவ்வுடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் பலவும் இதை அங்கீகரித்து தங்கள் சட்டங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இவ்வுடன்படிக்கையின் முக்கிய பிரிவுகள்:

பாகம் 1

பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள அனைவரும் குழந்தைகள் ஆவர். (விதி 1)

எந்த ஒரு குழந்தையையும். இனம். நிறம். பால். மதம் உடற்குறை. பிறப்பு அல்லது வேறு எந்த அடிப்படையிலும் வேறுபாடு காட்டாது. இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள உரிமைகள் கிடைப்பதற்கான உத்திரவாதத்தை அனைத்து நாடுகளும் அளிக்க வேண்டும். (விதி 2 (1))

எந்த ஒரு குழந்தையையும் அதன் பெற்றோர்களோ. சட்டரீதியான பாதுகாவலர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தகுதி. நடவடிக்கைகள். அவர்கள் அறிவிக்கும் கருத்துக்கள் அல்லது நம்பிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக பாரபட்சமாக நடத்தப்படுவது. தண்டனைக்குள்ளாக்கப்படுவது போன்ற குழந்தை நல விரோதச் செயல்பாடுகளுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படுவதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். (விதி 2 (2))

அரசு அல்லது தனியார் நடத்தும் சமூக நல அமைப்புகள். நீதிமன்றங்கள். நிர்வாக அதிகாரிகள். மந்திரி சபைத் துறைகள் போன்ற எப்பிரிவினராலும் மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்திலும் குழந்தையின் மிகச் சிறந்த நலன் பேணும் எண்ணமும். ஆர்வமும் தலையாய குறிக்கோள்களாக இருக்க வேண்டும். (விதி 3 (1))

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது பதிவு செய்யப்பட்டு விடவேண்டும், தனது பெயர். எந்நாட்டின் குடிமகன். தனது தாய். தந்தையை அறிந்து கொள்ளும் உரிமை. அவர்களால் பராமரிக்கப்படவேண்டிய உரிமை போன்ற அனைத்து உரிமைகளும் ஒரு குழந்தைக்கு வழங்கப்படவேண்டும். (விதி 7 (1))

சட்டத்திற்கு உட்பட்ட உரிய அதிகாரிகள். குழந்தைகள் நலன் தொடர்பாய் வழக்கிலிருக்கும் உரிய சட்டங்கள். விதிமுறைகளோடு பொருந்தும் அளவில் குழந்தையின் மிகச் சிறந்த நலன் பொருட்டு அதனைப் பெற்றோரிடத்திலிருந்து பிரித்து வைத்தல் அவசியம் என்று முடிவெடுத்தாலொழிய. எந்தவொரு குழந்தையும் அதன் விருப்பத்திற்கு எதிராய் தனது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது. பிரிக்கப்படாது என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும். குழந்தையை அதன் பெற்றோரிடமிருந்து பிரிக்க வேண்டியது சில இடங்களில் தவிர்க்க முடியாத தேவையாகி விடக்கூடும். குறிப்பாக பெற்றோர்களால் குழந்தை புறக்கணிக்கப்படுதல். இழிவுபடுத்தப்படுதல். கொடுமைப்படுத்தப்படுதல் முதலிய கட்டங்களில் அல்லது பெற்றோர்கள் பிரிந்து வாழ்பவர்களாகி குழந்தை யாரிடத்தில் அல்லது எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்பது பற்றிய முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் நேரும்போது மேற்படி குழந்தை பெற்றோர் பிரிவு என்பது குறித்த தீர்ப்பு அல்லது முடிவு அவசியமாகி விடுகிறது. (விதி 9 (1))

குழந்தைகளை சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் வெளிநாடுகளுக்கு இடம் மாற்றுவதும். அப்படி இடம் மாற்றிய குழந்தைகளைத் திரும்ப தராமையும் ஆகிய விஷயங்களை எதிர்த்துப் போராட உறுப்பு நாடுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (விதி 11 (1))

குழந்தைக்கு கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையுண்டு, இந்த உரிமையில் நாட்டு எல்லைகள் (ஊழ்ர்ய்ற்ண்ங்ழ்ள்) கணக்கிலெடுக்கப்படாமல். வாய்வழியாகவோ. எழுத்து மூலமாகவோ. அச்சிலோ. கலை இலக்கிய வடிவிலோ அல்லது குழந்தை விரும்பும் எந்தவொரு தொடர்பு சாதனம் வழியாகவும். அனைத்து வகை விவரங்கள். கருத்துகள் பிற விஷயங்களைத் தேடியறியவும். பெற்றுக் கொள்ளவும். குழந்தைக்கு இருக்கும் பல்வேறு உரிமைகள் உள்ளடங்கும். விதி 13 (1)

பெற்றோர் அல்லது பெற்றோர்களின் பொறுப்பிலிருக்கும்போதோ அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் அல்லது குழந்தையைப் பாதுகாக்கும் பிற எவரின் பொறுப்பிலிருக்கும்போதோ குழந்தைகள் உடல் ரீதியான அல்லது மனரீதியான வன்முறை. இழிவுபடுத்தப்படல். புறக்கணிப்பு அல்லது அலட்சியமாக நடத்தப்படல். கொடுமைப்படுத்தப்படல் அல்லது பாலியல் வன்முறை உள்ளிட்ட சுரண்டல் முதலியவற்றிற்கு ஆளாகாமல் தடுக்க. இவ்விதமான அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் பாதுகாப்பு குழந்தைகளுக்கு கிடைப்பதற்குரிய சட்டரீதியான. நிர்வாக ரீதியான. சமூகரீதியான. கல்வி ரீதியான எல்லா நடவடிக்கைகளையும் உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும். விதி 19 (1)

அப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குழந்தைகளை அனைத்து வகை வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதோடு குழந்தைகளுக்கும். அவர்களை வளர்க்கும் பொறுப்பிலிருப்பவர்களுக்கும் தேவையான ஆதரவையும். ஊக்கத்தையும் அளிக்கக் கூடியதாக சமூகஞ்சார் செயல்பாடும் அல்லது திட்டங்கள் நிறுவப்படத் தேவைப்படும் வழிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டியதும் அவசியம். தவிர. மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகள். இந்த பத்தியின் முதலில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகள் மீதான வன்முறைகள். அத்துமீறல்கள் முதலியவற்றிலிருந்து அவர்களைக் காக்க பிறவகை பாதுகாப்பு நடவடிக்கைகள். தவிர. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகள் மீதான கொடுமைகள். சுரண்டல்கள் முதலியவற்றை இனங்காட்டுதல். அவை குறித்த புகார் தருதல். அவை குறித்த துப்புத் துலக்கல். அவற்றிற்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரை செய்தல். அவற்றிற்கான சிகிச்சை மற்றும் அத்தகைய வன்முறைகளின் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகள். குழந்தைகள் மீதான வன்முறை. அத்துமீறல்கள். சுரண்டல் குறித்த தொடர் கண்காணிப்பும் விவரம் அறியும் தொடர் நடவடிக்கைகளும் அவசியம். (விதி 19 (2))

ஒரு குழந்தை அதன் குடும்பச் சூழலிலிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிக்கப்பட்டாலோ அல்லது அதனுடைய சிறந்த நலனுக்காக அதனைக் குடும்பச் சூழலிலிருந்து பிரித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ. அந்தக் குழந்தைக்குப் பிரத்யேக அல்லது கூடுதல் பாதுகாப்பு மற்றும் உதவி தருவது அரசின் கடமையாகும். (விதி 20 (1))

குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளும் முறையை அனுமதிக்கும் உறுப்பு நாடுகள். அப்படி தத்து கொடுக்கும் அல்லது தத்தெடுக்கும் குழந்தையின் மிகச் சிறந்த நலனை மனதில் கொண்டு இயங்க வேண்டியது இன்றியமையாதது. தத்து கொடுத்தல் அல்லது எடுத்தலில் குழந்தையின் மிக முக்கிய நலனே பிரதான அடிப்படையாகக் கொள்ளப்படவேண்டும். அதற்கான உத்திரவாதத்தை அளிக்க வேண்டியது உறுப்பு நாடுகளின் கடமை. (விதி 21)

வளர்ப்புப் பிள்ளையாக ஒரு குழந்தை தத்தெடுத்துக் கொள்ளப்படும்போது அந்த தத்தெடுத்தால் தகுதி வாய்ந்த அதிகாரிகளால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அமையவேண்டும், மேற்படி அதிகாரிகள் தத்தெடுத்தல் அல்லது தத்துக் கொடுத்தலுக்கான அனுமதி வழங்கும்போது. சம்பந்தப்பட்ட நாட்டிற்குரிய சட்டம் மற்றும் நடைமுறைகளோடு பொருந்தும் அளவிலும். மற்றும் குறிப்பிட்ட தத்துக் கொடுத்தல் அல்லது எடுத்தல் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள். உறவினர்கள் மற்றும் சட்டரீதியான பாதுகாவலர்கள் முதலியோரின் அடிப்படையிலான அந்தஸ்துக்குத் தகுந்த விதமாய் அமையும் அளவிலும் இருப்பதாக. சம்பந்தப்பட்ட நபர்களைப் பற்றிக் கிடைத்திருக்கும் அனைத்து ஏற்புடைய மற்றும் நம்பத்தகுந்த விவரங்களின் அடிப்படையில் மேற்படி தத்துக்கான அனுமதியை வழங்கவேண்டும். அவ்விதமே. தத்துக் கொடுத்தல் அலலது தத்து எடுத்தல் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் அதற்கான தங்கள் இசைவை தேவையான ஆலோசனைகள். அறிவுரைகளைப் பெற்று. அவற்றின் அடிப்படையில் தத்து பற்றிய முழு அறிவையும். விழிப்புணர்வையும் பெற்ற நிலையில் தருகிறார்களா என்பதை அறிந்துணர வேண்டியதும் தத்துக்கான அனுமதியளிக்கும் அதிகாரிகளின் கடமை. (விதி 21 (அ))

ஒரு நாட்டின் குழந்தைக்கு அது பிறந்த நாட்டிலேயே நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுவதற்கான அன்பும். பாதுகாப்பும் கூடிய மாற்றுக் குடும்பம் அல்லது தத்தெடுத்துக் கொள்ளும் குடும்பம் கிடைக்க வழியில்லையெனில். இத்தகைய பிற தகுந்த வழிகளில் குறிப்பிட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட வழியில்லையெனில். அப்படிப் பட்ட தருணங்களில் நாடுகளுக்கிடையேயான தத்தெடுக்கும் முறையை குழந்தை நலனுக்கான மாற்று வழியாக உறுப்பு நாடுகளில் ஏற்றுக் கொள்ள வேண்டும். (விதி 21 (ஆ))

அவ்விதம் தேசங்களுக்கிடையேயான தத்தெடுத்தல். தத்துக் கொடுத்தல் நிகழ்கையில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் தேசிய அளவிலான தத்தெடுத்தலில் பெறுவதற்குரிய எல்லா பாதுகாப்புகளையும். தர அளவையும் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். (விதி 21 (இ))

அப்படி நாடுகளுக்கிடையே நிகழும் தத்தெடுத்தலில். அப்படி தத்துக் கொடுக்கப்படும் அல்லது தத்து எடுக்கப்படும் குழந்தைகளின் மூலம் அதில் சம்பந்தப்பட்டவர்கள் நேர்மையற்ற அளவில் இலாபம் சம்பாதித்துவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். (விதி 21 (ஈ))

நாடுகளுக்கிடையேயான தத்தெடுத்தல் அல்லது தத்துக் கொடுத்தல் அல்லது ஒரு குழந்தையை அதன் சொந்த நாட்டிலிருந்து இடம் பெயர்த்து வேறொரு நாட்டில் குடியமர்த்துதல் முதலான விஷயங்கள் சீரிய முறையில் நடந்தேற தகுதி வாய்ந்த அதிகாரிகள் அல்லது அதிகார அமைப்புகளை ஏற்பாடு செய்து தர வேண்டியது உறுப்பு நாடுகளின் கடமை, அந்த நோக்கில் இந்த விதி 21ன் வரையைறைக்குள் உட்படுமாறு இரு நாடுகளுக்கிடையேயும். பல நாடுகளுக்கிடையேயுமாய் ஏற்பாடுகள் அல்லது இசைவுகளை உருவாக்குவதன் மூலம் இந்த விதி 21ன் குறிகோள்களை. எங்கெல்லாம் தேவையோ. அங்கெல்லாம் முன்னெடுத்துச் செல்வதும். அதன் வழி நாடுகளுக்கிடையேயான குழந்தைப் பரிமாற்றங்களை முறைமைப்படுத்துவதும் உறுப்பு நாடுகளின் பணி. (விதி 21 (உ))

ஒரு குழந்தை. அகதி என்ற அந்தஸ்து நிலையை நாடும் நேரம் அல்லது சம்பந்தப்பட்ட நாட்டின் சட்ட திட்டங்கள் அல்லது சர்வதேச சட்டதிட்டங்களுக்குப் பொருந்தும்படி ஒரு குழந்தை அகதி எனக் கொள்ளப்பட்டாலோ. அதன் தாய். தந்தையர் அல்லது வேறு எந்த நபரின் துணையோடிருந்தாலும். இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தை தற்போதைய பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அல்லது சம்பந்தப்பட்ட அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வேறு சர்வதேச மனித உரிமைகள் அல்லது மனித நேய அமைப்புகள் அல்லது மனிதாபிமான அடிப்படையிலான உதவி நிறுவனங்கள். அரசு இயந்திரங்களில் தரப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனுபவிக்கும்படி பார்த்துக் கொள்வதும். அதற்குரிய உதவிகள். வழிவகைகளைச் செய்து தருவதும். குழந்தைக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கச் செய்வதும். உறுப்பு நாடுகளின் கடமையாகும். (விதி 22 (1))

மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சுயமரியாதை. தன்னிறைவு முதலியவற்றை உண்டாக்கக்கூடியதான. ஊனமுற்ற குழந்தையும் சமூகப் பணியில் குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வமான பங்காற்றும்படிச் செய்வதுமான இணக்கமான சூழலில் ஒரு முழுமையான. கௌரவமான வாழ்க்கை வாழும் உரிமை உண்டு என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. (விதி 23 (1))

ஊனமுற்ற குழந்தைகளுக்கு கூடுதல் அல்லது பிரத்யோக கவனிப்புக்கான உரிமை உண்டு என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும், அதன் அடிப்படையில். இருக்கும் வள ஆதாரங்களுக்கு உட்பட்ட விதத்தில். அப்படிப்பட்ட கூடுதல் கவனிப்புக்குரிய குழந்தைக்கு அது விண்ணப்பித்துக் கேட்டுக் கொள்ளும் உதவிகளை. அதன் சூழல். நிலை முதலியவற்றைக் கணக்கில் கொண்டும். அதன் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டும். அவற்றிற்குரிய விதத்தில் அவற்றிற்கு ஏற்றதாக இருக்கும் உதவிகளை செய்து கொடுத்து ஊக்கமளிப்பதும். அதற்கான உத்திரவாதம் அளிப்பதும் உறுப்பு நாடுகளின் கடமையாகும். (விதி 23 (2))

குழந்தையின் உடல்ரீதியான. மனரீதியான சிகிச்சைக்காகவோ அல்லது கவனிப்பு. பாதுகாப்பு முதலிய காரணங்களுக்காக தகுந்த அதிகாரிகளால் வேறிடத்தில் அமர்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அந்த இடத்தில் கிடைக்கப்படும் கவனிப்பு. மற்றும் குழந்தையின் இடமாற்றலோடு சம்பந்தப்பட்ட பிற எல்லா விஷயங்கள் பற்றிய தொடர்ந்த இடைவெளியில் பரிசீலனையும். கண்காணிப்பும் இருக்க வேண்டியதும். குழந்தையின் உரிமைகளில் ஒன்று என்பதை உறுப்பு நாடுகள் உணர்ந்தேற்றுக் கொள்கின்றன. (விதி 25)

குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை உறுப்பு நாடுகள் உணர்ந்தேற்றுக்கொள்கின்றன. மேற்படி உரிமையை குழந்தைகள் ஆக்கப்பூர்வமான. முன்னேற்றகரமான முறையில் பெறவும். சமவாய்ப்புகளின் அடிப்படையில் பெறவும் உரிய வழிவகைகளைச் செய்து தந்து. மேற்படிக் கல்வி உரிமையை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிட்டச் செய்து வெற்றிகரமாக்கும் நோக்கில் உறுப்பு நாடுகள் கீழ்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்: (விதி 28)

ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்குதலும். அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்தலும். (விதி 28 (அ))

குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதற்கான. எல்லா நாட்களும் ஆஜராவதற்கான ஊக்கம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். குழந்தைகள் பாதிப் படிப்பில் பள்ளியைவிட்டு நின்றுவிடுவதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல். (விதி 28 (உ))

பொருளாதாரரீதியான சுரண்டல்கள். ஒடுக்கு முறைகளிலிருந்து பாதுகாக்கப்படவும். அபயகரமான அல்லது குழந்தையின் கல்வியில் குறுக்கிடுவதற்கான அல்லது குழந்தையின் தேகநலத்திற்குத் தீங்கு விளைவிப்பதற்கான அல்லது குழந்தையின் உடல். மன. ஆன்ம. ஒழுக்க மற்றும் சமூக மேம்பாட்டிற்கு ஊறு விளைவிக்கக் கூடிய எந்தவொரு வேலையைச் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படவும் குழந்தைகளுக்கு உள்ள உரிமையை உறுப்பு நாடுகள் உணர்ந்தேற்றுக் கொள்கின்றன. (விதி 32 (1))

அனைத்து உறுப்பு நாடுகளும் குழந்தையை அனைத்து விதமான பாலியல்ரீதியான சுரண்டல் (நங்ஷ்ன்ஹப் உஷ்ல்ப்ர்ண்ற்ஹற்ண்ர்ய்) மற்றும் பாலியல் மோசடி (நங்ஷ்ன்ஹப் ஹக்ஷன்ள்ங்) ஆகியவற்றிலிருந்து காத்தல். இதற்காக அனைத்து உறுப்பு நாடுகளும். கீழ்கண்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்கென. தேவையான. தேசிய அளவிலான. இருமுனை மற்றும் பல்முனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். (விதி 34)

குழந்தைகள் எந்த நோக்கத்திற்காகவும் எந்த விதத்திலும் வாங்க. விற்கப்படுவதை. கடத்தப்படுவதை. இடத்திற்கு இடம் பெயர்க்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான தேசிய அளவிலான. இருநாடுகளிடையேயான. பல நாடுகளுக்கிடையேயான எல்லா நடவடிக்கைகளையும் உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும். (விதி 35)

குழந்தைகள் நலன் தொடர்பான எந்தவொரு அம்சத்திற்கும் தீங்கு விளைவிப்பதற்கான வேறு எல்லாவகை சுரண்டல்களிலிருந்தும் குழந்தைகளைக் காக்க வேண்டியது உறுப்பு நாடுகளின் கடமை. (விதி 36)

எந்தவொரு குழந்தையையும் சித்திரவதை மற்றும் பிற எந்தவகை மனிதத்தன்மையற்ற அல்லது மனிதனை இழிவுபடுத்தும் விதத்திலான நடைமுறைக்கு அல்லது தண்டனைக்கு ஆளாக்கக் கூடாது. பதினெட்டு வயதிற்குக் குறைவாக உள்ள நபர்களால் நடத்தப்பட்ட குற்றங்கள் அல்லது சட்டமீறலுக்கு மரண தண்டனை. ஆயுள் தண்டனை போன்ற விடுதலைக்குச் சாத்தியமற்ற தண்டனை எதுவும் விதிக்கப்படக்கூடாது. (விதி 37 (அ))

எந்தவொரு குழந்தையின் சுதந்திரமும் சட்டத்திற்குப் புறம்பான வகையிலோ. ஏதேச்சதிகாரத்துடனோ பறிக்கப்படக்கூடாது. ஒரு குழந்தை கைது செய்யப்படுவது. தடைக்காவலில் வைக்கப்படுவது. சிறை தண்டனைக்காளாவது முதலியன எல்லாம் இணக்கம் கூடிய அளவில் இருக்க வேண்டியதும். கடைசி கட்ட நடவடிக்கையாகவும். குறைந்தபட்சமான உரிய தண்டனை காலத்திற்கானதாகவும் இருக்க வேண்டியதும் அவசியம். (விதி 37 (ஆ)

சுதந்திரம் பறிக்கப்பட்ட எந்தக் குழந்தையும். மனிதத் தன்மையோடும். மனிதனுக்கு இருக்கும் உள்ளார்ந்த கௌரவம். மரியாதையை உணர்ந்தேற்கும் விதத்திலுமாய் சம்மந்தப்படுத்தப்பட்ட குழந்தையின் வயதின் அடிப்படையிலான குழந்தைகளின் தேவைகளை கவனத்தில் கொண்டு. அதற்குரிய விதத்தில் நடத்தப்பட வேண்டியது அவசியம், முக்கியமாக. சுதந்திரம் பறிக்கப்பட்ட எந்தக் குழந்தையும். அதன் மிகச் சிறந்த நலனுக்கு ஏற்புடையது என்று கருதப்பட்டாலொழிய. காவலிலிருக்கும் வயதுவந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படவேண்டும், அசாதாரண நிலைமைகளைத் தவிர்த்துப் பொதுவாக கடித வழியோ அல்லது தொடர் இடைவெளியிலான வருகைகள் வழியோ தமது குடும்பத்தோடான தொடர்பை தக்க வைத்துக் கொள்ள குழந்தைக்கு உரிமை உண்டு. (விதி 37 இ)

தனது சுதந்திரம் பறிக்கப்பட்ட எந்த குழந்தைக்கும் உடனடியே சட்டரீதியான தக்க உதவிகளை அடையும் வழிகளைப் பெறுவதற்கான உரிமையையும். அப்படித் தனது உரிமை பறிக்கப்பட்டதன் சட்ட அடிப்படையை எதிர்த்து நீதிமன்றத்திலோ அலலது பிற ஏதேனும் தகுதிவாய்ந்த. சுதந்திரமானதும். பாரபட்சமற்றதுமான அதிகார அமைப்பின் முன்போ வழக்கு தொடுக்கவும். போராடவும் அத்தகு நடவடிக்கைகளே எதற்கும் ஒரு விரைவான தீர்வு கோரவும் உரிமையுண்டு. (விதி 37 (ஈ))

போர் சமயங்களில் தங்களால் பின்பற்றப்பட வேண்டியதான மனித நேய சட்டத்தின் விதிமுறைகளில் குழந்தைகளின் நலனோடு தொடர்புடையதான விதிமுறைகளை மதிக்கவும். அவற்றிற்குரிய மதிப்பை உறுதி செய்யவும் உறுப்பு நாடுகள் பொறுப்பேற்கின்றன. (விதி 38 (1))

சட்ட மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும். குற்றஞ்சாட்டப்படும். அறியப்படும் எந்தக் குழந்தைக்கும் அதனுடைய சுயமதிப்பு உணர்வு. மற்றும் மனித உரிமைகள் மற்றவர்களின் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றை மதிக்கும் தன்மையும் பாதிக்கப்படாத வண்ணம் நடத்தப்பட வேண்டிய உரிமையை அவ்வண்ணமே சட்டத்தை மீறியதாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட குழந்தைகள் நடத்தப்படும் விதம் அவர்களின் வயதைக் கணக்கில் கொண்டும். சமூகத்தோடு மேற்படி குழந்தைகளை திரும்ப இணைப்பது. தண்டனைக்குப்பின் அக்குழந்தைகளை சமூகத்தில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பில் ஈடுபடுவது முதலிய நோக்கங்களின். ஆர்வங்களின் அடிப்படையில் இருக்கவேண்டிய அவசியத்தை. அப்படி நடத்தப்படுவதற்கான குழந்தைகளின் உரிமையை உறுப்பு நாடுகள் உணர்கின்றன. (விதி 40 (1))

சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் அல்லது குற்றஞ்சாட்டப்படும் எந்தக் குழந்தைக்கும் குறைந்த பட்சம் கீழ்க்காணும் உத்திரவாதங்கள் கிடைக்க வேண்டும். (விதி 40 (2) (ஆ))

சட்டப்படி குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கொள்ளப்படுதல் (விதி 40 (2 ஆ (i))

அவன் அல்லது அவளுக்கு எதிராக குற்றச்சாட்டைப் பற்றி உடனடியாகவும். நேரிடையாகவும் அல்லது அவன் அல்லது அவளின் பெற்றோர்கள் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் மூலம் விவரம் அறிவதற்கும் மற்றும் வேறுவகை குற்றச்சாட்டிற்கெதிரான தன்னிலை விளக்கத்தைத் தயாரிப்பதிலும். நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதிலும். சட்ட அல்லது அதன் தொடர்பான வேறு வகை உதவிகளைப் பெறுவதற்கும் உத்திரவாதம். (விதி 40 (2 ஆ (ii))

குழந்தை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையானதா. பொய்யானதா என்பதை அறிய. தகுதி வாய்ந்த. சுதந்திரமான. பாரபட்சமற்ற அதிகாரி அல்லது நீதியமைப்பு ஆகியவற்றின் மூலம் சட்டப்படி நியாயமான விசாரணை நடத்தப்பட்டு. அதில். குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கவும். போதிய சந்தர்ப்பங்களும். வழக்காடல் தொடர்பான உதவிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில். குழந்தையின் மிகச் சிறந்த நலனுக்குத் தீங்கு பயக்கும் என்று கருதப்பட்டாலொழிய. அத்தகைய குற்றச்சாட்டு தொடர்பான தீர்ப்பை விரைவுபடுத்துவதில் அது குழந்தையின் சீரிய நலனுக்கு ஊறுவிளைவிக்குமா என்று பார்த்துக் கொள்வதும். அப்படிப் பார்க்கும் விஷயங்களை அடிப்படைகளாகக் கொள்ள வேண்டியதும் அவசியம். காலதாமதமின்றி உடனடியே தீர்ப்பளித்தலுக்கான உத்திரவாதமும் அத்தியாவசியம். (விதி 40 (2 ஆ (iii))

குற்றத்தை ஒப்புக் கொள்ளும் விதமாய் வாக்குமூலம் கொடுக்கும்படி குழந்தைகள் நிர்பந்திக்கப்படாமை. மேலும் தனக்கு எதிராயுள்ள சாட்சிகளை விசாரணை செய்யவும் அல்லது அவ்விதம் மேற்படி எதிர்சாட்சிகள் விசாரணை செய்யப்படவுமான உரிமை. அவ்வண்ணமே. தன் சார்பாய் பேசும் சாட்சிகளின் பங்கேற்பும். விசாரணையில் சமத்துவத்தின் அடிப்படையில் கிடைக்கப் பெறுதல். (விதி 40 2 ஆ (iv))

அவ்விதம் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டால் அத்தகு முடிவு அல்லது தீர்ப்பையும். அதன் தொடர்பாய் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும். வேறொரு முதலிலிருந்ததைவிட மேம்பட்ட அதிகத் தகுதிவாய்ந்த. சுயேச்சையான சார்பற்ற அதிகாரி அல்லது சட்டப்படியான நீதியமைப்பால் மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதற்கான உத்திரவாதம். (விதி 40 (2 ஆ (v))

வழக்கில். நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி. குழந்தையால் பேச இயலாதயாய். புரிந்து கொள்ள முடியாததாய் இருப்பின். மொழிபெயர்ப்பாளர் அல்லது பொருள் விளக்கம் தருபவரின் உதவி இலவசமாகக் கிடைக்கப் பெறுதல். (விதி 40 (2) (ஆ) (vi))

வழக்கு விசாரணையின் எல்லாக் கட்டடங்களிலும் தனது அந்தரங்கம் முழுமையாக மதிக்கப் பெறுதல். (விதி 40 (2) (ஆ) (vii))

இந்த உடன்படிக்கையில் உலகநாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இதில் 1992 ஆம் ஆண்டு கையெழுத்திட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 – அன்று உலக நாடுகள் குழந்தை உரிமை நாளாக கடைபிடித்துக் கொண்டாடுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*