மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (30.07.2024 செவ்வாய்), காலை 10.00 மணியளவில், காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட 70-க்கும் மேற்பட்டோரை அம்பலத்தடையார் மடத்து வீதி – ஆம்பூர் சாலை சந்திப்பில் தடுத்துப் போலீசார் கைது செய்தனர்.
முற்றுகைப் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வெ.அன்பரசன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.மலையாளத்தான், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஸ்ரீதர், புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் தூ.சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, சுற்றுச் சூழல் மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செலவன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் அர.அபிமன்னன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொறுப்பாளர் இரா.வேலுச்சாமி, இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி உள்ளிட்ட 70 பேர் கலந்துகொண்டு கைதானார்கள்.
சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது பற்றி ஆதாரங்களுடன் அளித்த புகாரில் பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission) அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்புக் காவல்துறையில் (Vigilance and Anti-Corruption Police Unit) விசாரணை நிலுவையில் உள்ளது. இவ்விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வருகிறார். கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவு காவல்துறையினரும் விசாரணையை முடித்து வழக்குப் பதிவு செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். இதுகுறித்து தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான தலைமைச் செயலருக்கு (Chief Vigilance Officer) புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும், 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கு, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞர் (Special Public Prosecutor) நியமிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
Leave a Reply