பாரதியார் பல்கலைக்கூடத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ்-ஐ பதவி நீக்க வேண்டும்,
அரசு நிதி, அதாவது பல்கலைக்கூடப் பேராசிரியர்கள், ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ.5 இலட்சத்து 17 ஆயிரத்தை விதிகளை மீறி எடுத்துச் செலவிட்டது,
ஏ.ஐ.சி.டி.இ (AICTE), யு.ஜி.சி. (UGC) விதிகளை மீறி எவ்வித தகுதியில்லாமல் நியமிக்கப்பட்ட 7 உதவிப் பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்யவும்,
பி.வி.போஸ் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட 22.09.2021 முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்காமல் இலட்சக்கணக்கான ரூபாய் தண்டச் சம்பளம் பெற்றதற்குத் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி,
‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் இன்று (21.07.2023), காலை 10 மணிக்கு, காமராசர் சிலை அருகே ஒன்றுகூடி ஊர்வலமாக சென்று தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். காவல்துறையினர் அம்பலத்தடையார் வீதி – செஞ்சி சாலை சந்திப்பில் தடுத்து நிறுத்தி 50க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மண்டலத் தலைவர் வெ.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் ஜெ.பரகத்துல்லா, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜெ.சம்சுதீன், இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ, இ.கோவன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ச.சத்தியவேல், பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, புதுச்சேரி சிந்தனையாளர் பேரவைத் தலைவர் கோ.செல்வம், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின் பிரான்சுவா, மக்கள் நற்பணி இயக்கத் தலைவர் வி.மாறன், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், அண்ணல் காந்தி மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கைதாயினர். மேலும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மா.ஏழுமலை, ஜெயராமன், பாலா, கன்னியம்மாள், லலிதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு கைதாயினர்.
Leave a Reply