சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனே அரசாணை வெளியிட வேண்டும்: கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் இன்று (04.06.2023) காலை 10 மணியளவில், சோழிய செட்டியார்கள் சமூகக் கூடத்தில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

சட்டக் கல்லூரி மாணவி இரா.சுகன்யா வரவேற்புரை ஆற்றினார்.

மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா கல்விமணி ‘தமிழ்வழிக் கல்வின் தேவை’ என்ற தலைப்பிலும், தாய்வழிக் கல்விக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் நா.இளங்கோ ‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் சிக்கல்களை எதிர்நோக்கி’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர்.

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் வழக்கறிஞர் ஜெ.பரகத்துல்லா, புதுச்சேரி தன்னுரிமை இயக்கத் தலைவர் தூ.சடகோபன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ந.மு.தமிழ்மணி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பலுலுல்லா, தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் சத்தியவேல், இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின் பிரான்சுவா, இந்திய மக்கள் சக்தி இயக்கத் தலைவர் அரிகிருஷ்ணன், காந்தி மக்கள் இயக்கத்தின் நிறுவுநர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தலைவர் இரா.சுகுமாரன் நன்றி கூறினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1) சமூக அமைப்புகளிடம் முதலமைச்சர், கல்வி அமைச்சர் உறுதி அளித்தபடி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

2) சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் நடத்த வேண்டும்.

3) புதுச்சேரியில் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரையில் தமிழ் வழிக் கல்வியைச் செயல்படுத்த வேண்டும்.

4) சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அவசரகதியில் இந்தாண்டு செயல்படுத்தக் கூடாது.

5) கல்வித்துறையில் ஆசிரியர் இடமாற்றல் கொள்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதனைத் திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர்களுக்குப் பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே கலந்தாய்வு நடத்தி இடமாற்றம் செய்ய வேண்டும்.

6) தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் தொடர் கூட்டங்கள் நடத்துவது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*