பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சென்னையில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்பும் இயக்கம் இன்று (03.05.2023), காலை 10.30 மணிக்கு, தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்றது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். பேராசிரியர் நா.இளங்கோ, ஓவியர் இராஜராஜன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் தொடக்கி வைத்தார்.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா, பழங்குடி மக்கள் விடுதலை இயக்கச் செயலாளர் மா.ஏகாம்பரம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பலுலுல்லா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ, நட்புக் குயில்கள் பொறுப்பாளர் சீனு.தமிழ்மணி, சுற்றுச்சூழல் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்குளின் பிரான்சுவா, ஆயோத்திதாசப் பண்டிதர் பேரவைத் தலைவர் சாது அரிமாவளவன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பாதுகாப்புக் குழுப் பொறுப்பாளர் சுகானந்தம், புதுவைக் குயில் பாசறை பொறுப்பாளர் ச.ஆனந்தகுமார், த.மோகன், ஆலங்குப்பம் முனுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழக முதல்வருக்கு இக்கோரிக்கை அடங்கிய அஞ்சலட்டை அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இக்கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்திட வேண்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் அனுப்ப உள்ளோம்.
வே.ஆனைமுத்து தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர் ஆவார். பெரியாரின் ஒப்புதலோடு அவரது பேச்சுக்கள், எழுத்துக்களைத் தொகுத்து ‘பெரியார் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர். பின்னர் அதனை விரிவாக்கி 20 தொகுதிகளாக வெளியிட்டவர். மண்டல் குழுப் பரிந்துரையை ஏற்று பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முழுக் காரணமாக இருந்தவர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, சிந்தனையாளன் இதழ் மூலம் தன் இறுதிக் காலம் வரையில் பெரியார் கொள்கைப் பரப்பியவர். ஏராளமான நூல்கள் எழுதிய அறிஞர் ஆவார்.
Leave a Reply