காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதைச் செய்து பொய் வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 300 பேர் பங்கேற்பு!
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் 13.03.2023 திங்கள், காலை 10 மணியளவில், அண்ணா சிலை அருகில், காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர் உட்பட பழங்குடி இருளர் 7 பேர் சித்தரவதைச் செய்யப்பட்டு பொய் வழக்குப் போடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி.இரமேஷ், தலைவர் க.சிவகாமி, வழக்கறிஞர் மு.பூபால், இளைஞர்களுக்கான சமூக விழிப்ணர்வு மையம் ஒருங்கிணைப்பாளர் இரா.பாபு, பழங்குடியினர் விடுதலை இயக்கம் செயலாளர் மா.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் கே.இராம்குமார் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றினர்.
திமுக மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.இராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் இரா.அந்தோனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் கழகம் மண்டலத் தலைவர் வே.அன்பரசன், திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பாளர் இர.தந்தைபிரியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கோ.இராமசாமி, தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சுவாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் பி.பிரகாஷ், செயலாளர் இராஜா, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் தலைவர் எம்.முகமது உமர் பாரூக், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஜெ.சம்சூதீன், மாவட்ட தலைவர் எம்.ஒய்.பலுலுல்லா, தொல்காப்பியர் லஞ்ச ஒழிப்பு இயக்கம் தலைவர் குரு.இராஜாராமன், இயற்கை கலாச்சார புரட்சி இயக்கம் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், தலித் பேந்தர் ஆப் இந்தியா மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் த.சிகாமணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தலைவர் அ.ச.தீனா, இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கம் தலைவர் அர.அரிகிருஷ்ணன், தமிழ்த் தேசிய பேரியக்கம் தலைவர் இரா.வேல்சாமி, புதுவை பூர்வீக பழங்குடி இருளர் இளைஞர்கள் முன்னேற்ற சங்கம் தலைவர் இரா,இராஜேந்திரன், மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் துணைத் தலைவர் ஆதிமூலம், தலித் மக்கள் கல்வி உரிமை இயக்கம் தலைவர் ஆ.கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
முடிவில் சமூக ஆர்வலர் கு.கலைப்புலி சங்கர் நன்றி கூறினார்.
கோரிக்கைகள்:
1) காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பழங்குடி இருளர்கள் மீதான சட்டவிரோத காவலில் கொடும் சித்திரவதைச் செய்து பொய் வழக்குப் போடப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடி இருளர்கள் என்பதால் குற்றமிழைத்த போலீசார் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சரண்யா உட்பட காவல் அதிகாரிகள், போலீசார் என அனைவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
4) பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
5) உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் புதுச்சேரி காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவில்லை. புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் காவல்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
Leave a Reply