மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (31.05.1998) விடுத்துள்ள அறிக்கை:
மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு & பாண்டிச்சேரி சார்பில் பாண்டிச்சேரியில் மே மாதம் 30.05.1998, 31.05.1998 தேதி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்:-
1. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஒட்டு மொத்த மரண தண்டனை சர்வேத சட்டங்களுக்கும், நடைமுறைக்கும் எதிரானது என மாநாடு கண்டிக்கிறது.
2. மரண தண்டனை மனித தன்மையற்றது அநாகரிகமானது ஜனநாயக நாட்டிற்கு எதிரானது.
3. மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக மாபெரும் மக்கள் இயக்கங்களை கட்டியமைக்க அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் இந்த மாநாடு வேண்டுகிறது.
4. மரண தண்டனைக்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் மற்றும் பகுதிவாரி கூட்டங்களை நடத்துவது எனவும் மாநாடு முடிவெடுக்கிறது.
5. தமிழ்நாடு அரசு 30.05.1998 அன்று சட்டசபையில் நிறைவேற்றிய தமிழ்நாடு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (TNPTA ACT) இந்த மாநாடு கண்டிக்கிறது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் மேலும் மரண தண்டனையை கட்டாயமாக்கியும் உள்ள இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற மாநாடு வேண்டுகிறது.
6. தமிழ்நாடு பயங்கரவாத நடவடிக்கை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக மக்கள் இயக்கங்களை நடத்துவது எனவும் மாநாடு முடிவு செய்துள்ளது.
7. தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனைத் தேர்வுக் குழுவிற்கு அனுப்புமாறு கோரியுள்ள CPI, CPM, புதிய தமிழகம், பா.ம.க (PMK), I.N.L போன்ற கட்சிகளை மாநாடு பாராட்டுகிறது.
8. PUCL மாநாட்டில் புகைப்படக்காரர் ஒருவரை தாக்கியதாக பொய்யாக ஒரு வழக்கை ஏ.இருதயராசு என்ற தி.க (இரா) பிரிவினைத் சேர்ந்தவர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளதை மாநாடு கண்டிக்கிறது. மேலும் அந்த பொய் வழக்கை திரும்பப் பெற மாநாடு அரசை வேண்டுகிறது.
Leave a Reply