புதுச்சேரி சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (30.08.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:
புதுச்சேரி மக்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் அனைத்தையும் பேரிடர் காலத் தள்ளுபடியாக அறிவித்திட வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றால் அனைத்துப் பகுதி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக வேலை வருமானம் இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் நீதிமன்றங்களின் உத்தரவையும் மீறி தங்களது கடன் பாக்கிகளை வசூலிக்க ஈவு இரக்கமற்ற முறையில் மக்களிடம் மிக மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பேரிடர் மற்றும் தொற்று நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள புதுச்சேரி அரசு மின் கட்டண வரி ,சொத்து வரி, குப்பை வரி, சாக்கடை வரி உள்ளிட்ட வரி பாக்கிகளை வசூலிப்பதில் கடுமைக் காட்டுவது தற்போதைய சூழலுக்கு ஏற்றதல்ல.
வேலை, வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இன்றி அல்லல்படும் புதுச்சேரி மக்களிடம் வரி பாக்கிக்களை வசூலிக்க நெருக்கடி கொடுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
எனவே, புதுச்சேரி அரசு கொரோனா தொற்றின் தாக்கம் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை அனைத்து வரி பாக்கிகளையும் முழுமையாக தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரையில் மக்களுக்கு எவ்விதமான வரி கேட்பு அறிக்கைகளையும் அனுப்பாமல், வரி பாக்கிகளை வசூலிக்க நெருக்கடி கொடுக்காமலும் இருக்க வேண்டுமென சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.
இவண்,
கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.
லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.
கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.
சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.
கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.
பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.
தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.
பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.
ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.
புதுவைத் தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்.
Leave a Reply