மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள இருநூல்கள் வெளியீட்டு நிகழ்வு 16.09.2019 திங்கன்று, மாலை 6 மணியளவில், புதுச்சேரி சோழிய செட்டியார்கள் நலக் கூட்டத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தலைவர் இரா.சுகுமாரன் வரவேற்புரை ஆற்றினார்.
இராதே அறக்கட்டளைத் தலைவர் பொறிஞர் இரா.தேவதாசு, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், பழங்குடி மக்கள் விடுதலைக் கழகச் செயலாளர் மா.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நா.பிரபுராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
‘காஷ்மீர் என்ன நடக்குது அங்கே?’ என்ற நூலினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு வெளியிட்டுப் பேசினார். மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோர் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
2008ம் ஆண்டு காஷ்மீருக்குச் சென்ற அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவில் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன் இடம் பெற்றனர். அப்போது காஷ்மீர் பிரச்சனைக் குறித்து கண்டறிந்தவற்றையும், தற்போதைய நிலவரம் பற்றியும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
‘சட்டப்பூர்வ பாசிசம்’ நூலினை மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் வெளியிட்டுப் பேசினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவர் ப.அப்துல்லா, பூவுலகின் நண்பர்கள் தலைவர் சீனு.தமிழ்மணி, முற்போக்கு ஜனசக்தி தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், புதுச்சேரி மக்கள் நற்பணி மன்றத் தலைவர் வி.மாறன் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
மத்திய அரசுக் கொண்டு வந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act 1967), தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigating Agency – NIA) ஆகியவை இந்திய அரசியல் சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிராக இருப்பது குறித்து இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
நூல் குறித்துப் பேராசிரியர் நா.இளங்கோ, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கருத்துரை வழங்கினர்.
நூலாசிரியர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்கினார்.
முடிவில் சின்ன. சேகர் நன்றி கூறினார்.
Leave a Reply