தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி!

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த 4.5.2018 அன்று மரணமடைந்தார். இந்நிலையில், மக்கள்உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.05.2018), காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் அன்னாருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். பேராசிரியர் நா.இளங்கோ, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பாலு, முதலியார்பேட்டை வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் இரா.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், அமைப்புச் செயலர் ப.அமுதவன், பொருளாளர், பா.த.தமிழ்மாறன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, வே.அன்பரசன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் நா.தமிழ்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பி.சங்கரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சி.ஶ்ரீதர், மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அ.சந்திரசேகரன். சி.பி.ஐ. (எம்-எல்) மாநிலச் செயலர் சா.புருஷோத்தமன், சுசி (SUCI) கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இலெனின் துரை, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், தனித்தமிழ்க் கழகச் செயலாளர் சீனு.அரிமாப்பாண்டியன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் கோ.பு.தெய்வீகன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கோ.மு.தமிழ்செல்வன், மக்கள் சக்திப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிப் பொறுப்பாளர் ஜெ.சம்சுதீன், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் மா.ஏகாம்பரம், உழவர்கரை நகராட்சி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் கே.சந்திரா, ராஜீவ்காந்தி நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கே.சங்கரலிங்கம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் அ.கலைப்பிரியன், நண்பர்கள் தோட்டம் ப.திருநாவுக்கரசு, இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின், சமூக சேவகர் செ.ஆதவன், சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் செல்வமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மரலரஞ்சலி செலுத்தினர்.

கடந்த 29 ஆண்டுகளாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கெடுத்தவர் இரா.அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*