அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும், தொழிலாளர் விரோதப் போக்கைக் கடைபிடித்தும் வருவதைக் கண்டித்து, 10-01-2008 வியாழனன்று காலை 6.00 மணி முதல் தொழிலாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் உரி்மைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.

போராட்டத்தை அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கோ.சுகுமாரன் தொடக்கி வைத்தார். சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, துணைத் தலைவர் மு.பொன்னுசாமி, செயலாளர் ம.சந்திரகுமார், இணைச் செயலாளர் சு.முருகன், துணைச் செயலாளர் லோ.இராஜேந்திரன், பொருளாளர் கி.கண்ணன், இணைப் பொருளாளர் கி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன் ஆகியோர் போரட்டத்தில் கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தினர்.

தொழிலாளர்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

‘வெல்க, வெல்க, வெல்கவே…
அத்தியப்பா.. தொழிலாளர் நலச் சங்கம்
வெல்க, வெல்க, வெல்கவே…

பழிவாங்காதே…பழிவாங்காதே…
தொழிலாளர்களைப்
பழிவாங்காதே…

வெளியேற்று…வெளியேற்று…
வெளியாட்களை
வெளியேற்று…

விடமாட்டோம்…விடமாட்டோம்…
வெற்றி கிட்டும்வரை
விடமாட்டோம்…

ஒன்றுப்பட்டு நிற்கின்றோம்…
உரிமைக்காக நிற்கின்றோம்…

தொழிலாளர் ஒற்றுமை…
ஓங்குக…

என்று போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் ஒருமித்து முழக்கமிட்டனர்.

போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியிலுள்ள கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம் 11-01-2008 வெள்ளிகிழமை மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு நடைபெற உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*